விஜயதசமியை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 108 வீணை இசை வழிபாடு நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்
உலக பிரசித்தி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த அக்.,15ஆம் தேதி துவங்கிய நவராத்திரி விழா விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோவிலில், பல்வேறு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.
ஒவ்வொரு நாளும் மாலையில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிலையில், விஜயதசமியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது.
இந்த வீணை இசை வழிபாட்டு நிகழ்ச்சியில், மதுரை, சென்னை, நாமக்கல், திண்டுக்கல், ஆகிய பகுதிகளில் இருந்து மாணவிகள், பேராசிரியர்கள் என, ஏராளமானவர்கள் வீணை வழிபாட்டில் பங்கேற்பு செய்தனர்.
வீணை வழிபாட்டின் போது மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் பாடல்கள் பாடப்பட்டன, விநாயகர் பாடல் உட்பட பல்வேறு பாடல்கள் வீணை இசை வழியே இசைக்கபட்டன. வீணை இசை வழிபாட்டை பக்தர்கள், மாணவ மாணவியர்கள் , பெற்றோர்கள் , இசை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…