தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏசி, மின்விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து மின்சாரத் தேவையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தேசிய ஸ்தாபன காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த நிலையை முன்கூட்டியே கணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தவறிவிட்டதாகவும், மக்கள் கடும் வெப்பத்திலும் தொடர்ச்சியான மின்வெட்டாலும் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மின் உற்பத்தி போதுமானதாக இல்லாவிட்டாலும், மின் பரிமாற்றச் சந்தை (Power Exchange) மூலம் தேவையான மின்சாரத்தை அதிக விலை கொடுத்தாவது வாங்கி விநியோகிக்க வேண்டும் எனக் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும், 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மின்மாற்றிகள் பல இன்னும் பயன்பாட்டில் இருப்பதால் அவை அதிக சுமையை தாங்க முடியாமல் செயலிழப்பதாகவும், மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப மற்றும் களப்பணியாளர்கள் பற்றாக்குறையால் பழுதுகளை உடனடியாகச் சரிசெய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் தேசபக்தன் சாஜாகுணா வெளியிட்ட அறிக்கையில், மின் பரிமாற்றச் சந்தையில் இருந்து உடனடியாக கூடுதல் மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டும், பழுதடைந்த மற்றும் காலாவதியான மின்மாற்றிகளை போர்க்கால அடிப்படையில் மாற்ற வேண்டும், மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளார். மக்களின் அத்தியாவசிய தேவையான மின்சாரத்தை உறுதி செய்வது அரசின் அடிப்படைப் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…