சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, ‘நலம் TN’ இணையதளம் மற்றும் ‘நலம் AI’ வாட்ஸ்அப் சேவையையும் தொடங்கி வைத்தார்.
📍சென்னை: தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.139 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மருத்துவக் கட்டிடங்களை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.
👩⚕️ தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 2,144 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். புதிய நியமனங்கள் மூலம் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவ சேவைகள் மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டது.
💻 மேலும், அனைத்து சுகாதார சேவைகளையும் ஒரே தளத்தில் பொதுமக்கள் பெறும் வகையில் https://www.tnhealthfoundation.org/ என்ற ஒருங்கிணைந்த இணையதளத்தையும், ‘நலம் AI’ என்ற வாட்ஸ்அப் செயலியையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த புதிய தளங்கள் மூலம் மருத்துவ சேவைகள் தொடர்பான தகவல்களை எளிதில் பெறுவதுடன், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு நன்கொடைகளை வெளிப்படையான முறையில் வழங்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…