அதிமுக பொதுக்குழு முடிவு தொடர்பாக வந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஓ.பி.எஸ். தலைமையில் அதிமுக கட்சி எழுச்சியாக செயல்படும் என மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் பேட்டி
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பதவி செல்லாது என்றும் முன்பிருந்த ஒருங்கிணைப்பாளர் இணை, ஒருங்கிணைப்பாளர் நடைமுறையே தொடரும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மதுரை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் தலைமையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் நிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பின்னர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் செய்தியாளர் அவர் கூறும் போது, நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் வகையில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கியும் புரட்சித்தலைவர், தலைவியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம் என்று தெரிவித்தார். மேலும், அண்ணா திமுக என்பது தொண்டர்களுக்கான இயக்கம் என்பதை இந்த தீர்ப்பின் மூலம் நீதியரசர் தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கிறார் எனவே இந்தத் தீர்ப்பை புரட்சித்தலைவியின் ஆன்மாவும், புரட்சித்தலைவருடைய ஆன்மாவும் இணைந்து கொடுத்த வழிகாட்டுதலாகவே நாங்கள் பார்க்கிறோம் என கூறினார். மேலும் இந்த தீர்ப்பின் மூலம் கிடைத்த வெற்றியானது அதிமுகவின் ஒன்றரைக் கோடி தொண்டர்களின் வெற்றியாக தான் பார்க்க வேண்டும் என கூறிய கோபாலகிருஷ்ணன், மதுரை மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த வெற்றியானது தொண்டர்களின் வெற்றியாக நினைத்து அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடி வருகிறோம் என தெரிவித்தார்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…