சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்திற்கு தானே முழு பொறுப்பு என மத்திய கல்வி அமைச்சர் Dharmendra Pradhan தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சிபிஎஸ்இ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாணவர்களின் மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அனைத்து புகார்களும் ஆய்வு செய்யப்படும். ஏதேனும் முறைகேடு கண்டறியப்பட்டால் யாரும் தப்ப முடியாது” என உறுதியளித்தார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளனர். விடைத்தாள்களின் ஸ்கேன் பிரதிகள் தெளிவாக இல்லை, சில விடைகள் சரிபார்க்கப்படாமல் விடப்பட்டுள்ளன, இணையதளம் அடிக்கடி செயலிழக்கிறது, மறுமதிப்பீட்டு நடைமுறையில் குழப்பம் உள்ளது என்பன முக்கிய குற்றச்சாட்டுகளாகும்.
இதற்கு பதிலளித்த சிபிஎஸ்இ, “OSM முறை உலகளவில் பயன்படுத்தப்படும் நவீன மதிப்பீட்டு முறை. இது வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை அதிகரிக்கும்” என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் மாணவர்கள் தங்களது மதிப்பெண்கள் குறித்து திருப்தியில்லையெனில் மறுகூட்டல், விடைத்தாள் நகல் பார்வை மற்றும் மறுமதிப்பீடு கோரலாம் என தெரிவித்துள்ளது.
மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் இலவச ஆலோசனை சேவையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1800-11-8004 என்ற எண்ணிலும் resultcbse2026@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…