மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முப்புலி சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முப்புலி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 28ம் தேதி விக்னேஷ்வர பூஜை, தீர்த்த அலங்காரத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை 6 மணிக்கு ரக்ஷாபந்தனம், அங்குரார்பணம், காயத்திரி ஹோமம் நடந்தது. ஆகஸ்ட் 29ம் தேதி 2ம் கால யாகசாலை பூஜை, மாலையில் 3ம் கால யாகசாலை பூஜையும், ஆகஸ்ட் 30ம் தேதி 4, 5ம் கால பூஜையும், ஆகஸ்ட் 31ம் தேதி காலை 6ம் கால யாகசாலை பூஜை நடந்தது.
ஆகஸ்ட் 31ம் தேதி காலை 7 மணிக்கு கும்ப பூஜை முடிந்து வேதமந்திரங்கள், மேள, தாளம் முழங்க புனித நீர் உள்ள கும்பங்கள் புறப்பாடு நடந்தது. காலை 9.20 மணிக்கு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவரும், பி.ஆர்.கிரானைட்ஸ் உரிமையாளருமான பி.ராஜசேகரன் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து முப்புலி சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், மூர்த்தி, ஜல்லிக்கட்டு பேரவை மாநில செயலாளர் நாராயனன், மாவட்ட தலைவர் பழனி, துணை செயலாளர் பழனிவேல், செயற்குழு உறுப்பினர் வீராசாமி மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கஷ்டங்கள் தீரும் என நம்பி வந்த ஏராளமான பக்தர்களுக்கு சாமி அருள்பாலித்தார்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…