விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (27). இவரது மனைவி தனலட்சுமி (25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வேல்முருகன் கூலி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வேல்முருகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…