தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவச் செல்வங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறையாதாதால் பள்ளிகள் திறப்பு தேதி 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய தொடங்கியதாலும், கோடை வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்ததாலும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதையடுத்து 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என கடந்த வாரம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
முதல் நாள் என்பதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் செய்து கொடுத்துள்ளன. இதேபோல் பள்ளிகள் திறப்பு தாமதம் ஆனதால் அதனை ஈடு செய்ய சனிக்கிழமைகளில்
இதற்கிடையே ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகளை சிவப்பு கம்பளங்கள் விரித்து பூக்களை கொடுத்து ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதற்கிடையே கோடை விடுமுறை முடிந்து இன்று முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் “நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள், உலகைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும்! நான் உறுதுணையாக இருப்பேன்.” என்று உறுதி மொழி அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…