மதுரை விமான நிலையம் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் 14.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துபாயில் இருந்து மதுரைக்கு, ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை 8:20 மணி அளவில் வந்தடைந்தது. இதில் பயணம் செய்த பயணி ஒருவர் தன்னிடமிருந்த பேஸ்ட் போன்ற தங்கப்பொருளை குப்பைத் தொட்டியில் வீசி சென்றதாக கூறப்படுகிறது. இதை கண்டுபிடித்த மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர் உடனடியாக சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த சுங்கத்துறை அதிகாரிகள் பேஸ்ட் போன்ற பொருளை கைப்பற்றி சோதனை செய்தனர். 14 லட்சத்து 36 ஆயிரத்து 472 ரூபாய் மதிப்புள்ள 287 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விமானத்தில் வந்த பயணியை அடையாளம் காணும் வகையில் வீடியோ காட்சிகளை பார்வையிட்டு வருகின்றனர். இதனால் மதுரை விமான நிலைய வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…