சேது பொறியியல் கல்லூரி மற்றும் அருப்புக்கோட்டை விருதுநகர் சதுரங்க கழகத்தின் சார்பாக மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் சதுரங்க போட்டி நடத்தப்பட்டது. செப்டம்பர் 7ஆம் தேதி துவங்கப்பட்டு 11ஆம் தேதி நிறைவு பெற்றது .
துவக்க விழாவை, கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் எஸ். முகமது ஜலீல் நிர்வாக அதிகாரிகள் எஸ். எம் .சீனி மொகைதீன், எஸ் .எம் .சீனி முகமது அலி யார் மற்றும் உலக அளவிலான சதுரங்க கழகத்தின் முன்னாள் தலைவர் சுந்தர் துவக்கி வைத்தனர் .
இதில், 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் மாநில அளவில் இருந்து கலந்து கொண்டனர். அதில், ஆண்கள் பிரிவில் 10 பெண்கள் பிரிவில் 10 பேரும் தேர்வு செய்யப்பட்டனர் .
ஆண்கள் பிரிவில், சாம்பியன் பட்டத்தை மாஸ்டர் அஸ்வந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் பெண்கள் பிரிவில் தேஜஸ்வினி திருவள்ளுவர் மாவட்டத்திலிருந்தும் பெற்றனர். தேர்வு செய்யப்பட்ட 20 போட்டியாளர்களும் தேசிய அளவில் நியூ டெல்லியில் நவம்பர் மாதத்தில் நடக்கும் 15 வயதிற்கு உட்பட்ட போட்டிகளில் மாநிலத்தின் சார்பாக பங்கேற்க உள்ளனர் .
போட்டியில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் மெடல் கோப்பை மற்றும் முப்பதாயிரம் வரை பரிசு தொகை வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவை, கல்லூரித் தலைவர் மற்றும் நிறுவனர் எஸ் முகமது ஜலில், தலைமை தாங்கி துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். கல்லூரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார். சதுரங்க போட்டிகளின், இன்டர்நேஷனல் ஆர்பிட்டர் அனந்தராம் நன்றி உரை வழங்கினார் .
கல்லூரி நிர்வாக அதிகாரிகள் எஸ். எம். சீனி முகைதீன், எஸ். எம். சீனி முகமது அலி யார், எஸ். எம். நிலோஃபர் பாத்திமா, எஸ். எம். நாச்சியா பாத்திமா துணை முதல்வர் டாக்டர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…