மதுரை செப்டம்பர் 11 இமானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்த சென்ற வாலிபர் மதுரை அருகே விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா கரிசல்குலத்தைச் சேர்ந்தவர் சங்கிலி மகன் முத்தையா 35. அதே ஊரைச் சேர்ந்தவர் பாலுசாமி மகன் லட்சுமணன் 27 இருவரும் இமானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்த பரமக்குடிக்கு பைக்கில் சென்றனர். அவர்கள் சின்ன உடைப்பருகே சென்றபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் முத்தையா சம்பவ இடத்திலேயே பலியானார். பைக்கை ஓட்டிச் சென்ற லட்சுமணன் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.உயிரிழந்த முத்தையாவுக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…