மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ளது .
திருவேடகம் இங்கு மிகவும் பழமை வாய்ந்த சிவபெருமான் ஆலயமான திருஏடகநாதர் கோவில் உள்ளது.
இங்கு, ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல், இந்த ஆண்டும் நேற்று இரவு கோவிலிலிருந்து சுவாமி ஊர்வலமாக வைகை ஆற்றங்கரைக்கு விநாயகரும், குதிரை வாகனத்தில் ஏடகநாதரும் கேடயத்தில் திருஞானசம்பந்தரும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வைகை ஆற்றங்கர அருகில் சர்வ அலங்காரத்தில் வைத்திருந்தனர்.
பின்னர், சிவனடியார்கள் சார்பாக வேத மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆற்றில் ஏடு எதிர் ஏறும் வைபவம் நடைபெற்றது.
இதில், திருவேடகம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
இதில், கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…