தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்புகளில் தொகுதிவாரியாக சிறப்பிடம் பிடித்த மாணவர்களை சந்தித்து பரிசுகள் வழங்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார்.
எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, என்டிஆர், என நிறைய உதாரணங்கள் உள்ளன. இவர்கள் திரைத்துறையை போல் அரசியலிலும் பிரகாசமாக விளங்கினர். அந்த வகையில் கமல்ஹாசனும் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் அரசியல் கட்சி தொடங்க போகிறார் என்பதை உறுதிப்படுத்தும் சில சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த உள்ளாட்சி தேர்தலில் தனது கொடியையும் பெயரையும் விஜய் மக்கள் மன்றத்தினர் பயன்படுத்திக் கொள்ளலாம் என விஜய் தெரிவித்திருந்தார். இதனால் அந்த தேர்தல்களில் நிறைய பேர் வென்றனர்.
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளின் போது அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதேபோல் உலக பட்டினி தினத்தன்று 234 தொகுதிகளுக்கும் சென்று ஏழைகளுக்கு மதிய உணவு வழங்குமாறு நடிகர் விஜய்உத்தரவிட்டிருந்தார்.
தற்போது தமிழகத்தில் தொகுதிவாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்ட முடிவு செய்துள்ளார் நடிகர் விஜய்.
ஜூன் 17 ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை சந்திக்கிறார். அதிலும் 234 தொகுதிகளிலும் தொகுதிவாரியாக சிறப்பிடம் பெற்றவர்களை நடிகர் விஜய் அழைத்து பாராட்டி ஊக்கத் தொகையும் சான்றிதழையும் வழங்குகிறார். இதற்கான அறிவிப்பை விஜய்யின் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
விஜய்யின் செயல்பாடுகளும் 234 தொகுதிகளை உள்ளடக்கியே இருப்பதால் அவர் 2026 இல் அரசியல் களத்தில் குதிக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…