மதுரை கோவில் திருவிழாவில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது இரு பிரிவினரிடைய ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்த நிலையில் 30க்கும் மேற்பட்ட பைக்குகள் கார் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் திருவிழாவின் போது நேற்று இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்க்க விடாமல் மறைத்தபடி ஒரு தரப்பினர் ஆடிக்கொண்டிருந்ததால் மற்றொரு தரப்பினர் அவர்களை வழிவிடும்படி கேட்டுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து இருதரப்பினரிடமும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிலையில் நொண்டிகோவில் தெரு பகுதிக்குள் புகுந்த சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட பைக்குகள் மற்றும் ஓட்டு வீடுகளை உடைக்க தொடங்கினர். மேலும் வீட்டில் இருந்தவர்களையும் தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் கலவரத்தை தடுத்து நிறுத்தினர்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…