சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் இருந்து போஜராஜா நகர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் வாகனங்கள் திருப்பி விடப்படுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் 05.05.2023 முதல் செயல்பாட்டுக்கு வரும்:
1.கண்ணன் ரவுண்டானாவிலிருந்து வெளியே செல்லும் வாகனங்கள் கண்ணன் தெரு வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
2.கண்ணன் ரவுண்டானாவிலிருந்து கண்ணன் தெருவுக்குச் செல்லும் இரு சக்கர வாகனங்கள் பரசுராமன் தெரு – தர்மராஜா கோவில் தெற்குப் பாதை வழியாக கண்ணன் சாலையை சென்றடையலாம்.
3.கண்ணன் ரவுண்டானாவிலிருந்து கண்ணன் தெருவுக்குச் செல்லும் இலகுரக மோட்டார் வாகனங்கள் திருவெற்றியூர் சாலை – M.S. நாயுடு தெரு – சின்ன முனுசாமி தெரு வழியாக கண்ணன் சாலையை அடையலாம்.
4.போஜராஜா நகர் செல்ல விரும்பும் கனரக வாகனங்கள் சிபி ரோடு – கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் – கண்ணன் தெரு – போஜராஜா நகர் ரயில்வே கேட் வழியாக போஜராஜா நகரை அடையலாம்.
5.கண்ணன் தெருவில் இருந்து கண்ணன் ரவுண்டானா வழியாக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
6.கண்ணன் தெருவில் இருந்து கண்ணன் ரவுண்டானாவுக்குச் செல்ல விரும்பும் வாகனங்கள் சின்ன முனுசாமி தெரு – எம்.எஸ். நாயுடு தெரு – சாலை வழியாக கண்ணன் ரவுண்டானாவை அடையலாம்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…