மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள “மதுரை மாநாட்டு மையத்தில்”
மாபெரும் புத்தக கண்காட்சி வருகின்ற செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கூடல் மாமதுரையில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் அவர்கள் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல உத்தரவிட்டதன் பேரில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகின்ற செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை அனைத்து நாட்களிலும் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள “மதுரை மாநாட்டு மையத்தில்” மாபெரும் புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பாக ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட புத்தக அங்காடிகள் அமைக்கப்படவுள்ளது. இப்புத்தக கண்காட்சியில் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட சிறார் அரங்கமும், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் விருப்பமுள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் கவிதை, கட்டுரை, பேச்சு, புனைவு, நாடகம், சினிமா, தொல்லியல் மற்றும் நுண்கலை தொடர்பான பயிலரங்கங்கள் சிறந்த வல்லுநர்களைக்கொண்டு நடத்தப்படவுள்ளது.
தினந்தோறும் மாலை வேளையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள். நட்சத்திர பேச்சாளர்களின் உரை வீச்சுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன.
புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் பொருட்டு இப்புத்தக கண்காட்சியில் சிறார்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…