விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, காட்டுபாவா தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (40). இவர், அருப்புக்கோட்டை நகராட்சியின் 10 -வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். அப்துல்ரகுமான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
வேலை விஷயமாக வீட்டைப் பூட்டிச் சென்ற அவர், இரவு வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதனால், அருகில் இருந்தவர்களின் உதவியோடு, அப்துல்ரகுமான் வீட்டின் கதவை திறந்தார். வீட்டிலிருந்த பீரோ கதவு திறந்து கிடந்ததுடன், பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் ,
பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்கநகைகள், 50 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து, அப்துல்ரகுமான் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், திமுக கவுன்சிலர் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில், நகராட்சி கவுன்சிலரின் வீட்டு கதவை திறந்து நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…