அரியலூர் மாவட்டத்தில் சாலையோரம் 20 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் தத்தனூர் பொட்டக்கொல்லை பகுதியில் நேற்று முன்தினம் 20 வயது இளம்பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த உடையார்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இறந்த பெண் பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்த அபிநயா என்பது தெரியவந்தது. மேலும் மளிகைக் கடையில் வேலை பார்த்து வந்த அபிநயா, தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த 30ம் தேதி இரவு பார்த்திபன், அபிநயாவுடன் இருசக்கர வாகனத்தில் உடையார்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்துள்ளனர்.
இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், அபிநயாவை அங்கேயே விட்டு விட்டு பார்த்திபன் மட்டும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
படுகாயமடைந்த அபிநயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காதலியை காப்பாற்றாமல் விட்டுச் சென்ற பார்த்திபனை போலீசார் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…