தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, J-1 சைதாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் இன்று (06.06.2023) சைதாப்பேட்டை , கிழக்கு ஜோன்ஸ் ரோடு அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த Tata Ace லோடு வாகனத்தை சோதனை செய்த போது, வாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் குட்கா புகையிலைப்பொருட்களை லோடு வாகனத்தில் கடத்தி வந்த அப்துல்ரகுமான் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல், எம்.டி.எம் உட்பட 406 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 Tata Ace லோடு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…