செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் விலை வாசி உயர வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் வெளியூர் செல்லும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்பட லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்பெறுவதற்காக விரைவுச்சாலைகளை அமைக்கப்பட்டு அவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த சாலைகளை பராமரிப்பதற்காக வாகன ஓட்டிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை வழக்கமாக உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தேசிய நெடுஞ்சாலைகளில் 28 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. அந்த வகையில் மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் 15 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, விக்கிரவாண்டி-திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை, கொடை ரோடு-திண்டுக்கல்-புறவழிச்சாலை-சமயநல்லூர், மனவாசி- திருச்சி- கரூர், மேட்டுப்பட்டி-சேலம்-உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி-புதுச்சேரி-திண்டிவனம், நத்தக்கரை-சேலம்-உளுந்தூர்பேட்டை, ஓமலூர்-நாமக்கல், தர்மபுரி-கிருஷ்ணகிரி-தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி-திருச்சி-திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம்-மதுரை-தூத்துக்குடி, சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர்பேட்டை-பாடலூர் உள்பட 28 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தபட்டுள்ளது.
தபால், கூரியர் சேவை, சரக்கு, காய்கறி, எரிபொருள் என அனைத்துமே தமிழகம் முழுவதும் சாலை வழியே கொண்டு செல்லப்படுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் உயரக்கூடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…