மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை ஒத்தக்கடை அடுத்து உள்ள கொடிக்குளம் தனித் தொகுதியான கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாடட்டம் நடத்தினர்.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். வனிதா மற்றும் அன்ன லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் தங்களுடைய கிராமங்களை மாநகராட்சியோடு இணைத்தால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை இழக்க நேரிடும், மத்திய அரசு கிராமங்களுக்கு வழங்கும் சலுகைகளை இழக்க நேரிடும்.
அதே சமயம் எனவே எங்களை கிராமங்களை மாநகராட்சியோடு இணைத்தால் வரிகள் அதிகம் செலுத்த நேரிடும், இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.