ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கார் திடீர் என தீபற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் மணல் விலை பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவர் அவிநாசியில் கனி மெட்டல் மார்ட் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் ஈரோட்டிற்கு தனது காரில் கடை ஊழியர்களுடன் வந்துள்ளார்.
அப்போது ஈரோடு மாவட்ட எல்லையான விஜயமங்கலம் சுங்கச்சாவடி வழியாக வந்த போது காரில் புகை வந்துள்ளது. இதைக் கண்டு ராஜலிங்கம், ஊழியர்கள் ஜெயராமன், அருண்குமார், மூர்த்தி, செளந்தர பாண்டியன் ஆகியோர் காரை விட்டு இறங்கித் தப்பித்தனர்.
உடனடியாக கார் தீ பற்றி எரிய தொடங்கியதுடன் காரில் இருந்து கரும் பூகை வெளியேறியது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை தீயணைப்பு துறையினர் காரில் பற்றிய தீயை அனைத்தனர்.
இந்த சம்பவத்தால் பெருந்துறையில் இருந்து கோவை, திருப்பூர் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக பெருந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.