அக்டோபர் 15 ஆம் தேதி டாக்டர். அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சுற்றுச்சூழல் நலன் காக்கும் விதமாக 5000 பனை விதைகள் நடும் விழாவை விழித்தெழு தோழா சமுதாய முன்னேற்ற சங்கத்தின் மிகச் சிறப்பாக நடத்தினர்.
அக்டோபர் 09 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வேலூர் அடுத்த ராணிப்பேட்டைக்கு உட்பட்ட லாலாப்பேட்டை திருகாஞ்சனகிரி மலை அடி வாரத்தில், திருகாஞ்சனகிரி ஆலய நிர்வாகத்துடன் இனணந்து விழித்தெழு தோழா சமுதாய முன்னேற்ற சங்கத்தினர் 5000 பனை விதைகள் நடும் விழாவை மிக சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர்.
இந்த விழாவில் விழித்தெழு தோழா சமுதாய முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் திரு.மகேஷ்வரன் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார், திருகாஞ்சனகிரி ஆலய நிர்வாகத்தினர் தலைமை தாங்கினர், விழித்தெழு தோழா சமுதாய முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் திரு.சி.கேசவன் அவர்கள் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியின் இறுதியாக விழித்தெழு தோழா சமுதாய முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் திரு.மணிகண்டன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு விதை நடும் விழாவினை சிறப்பித்தனர்.
