மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்…..

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஏற்கனவே மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கை மற்றும் கால்களை இழந்த 4 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், நவீன செயற்கை கால்களையும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 5 நபர்களுக்கு மாவட்டத்தில் இயங்கி வரும் விடுதிகளில், தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கான பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது. சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பணியின் போது உயிரிழந்த பெண்ணின் மகளுக்கு, கருணை அடிப்படையில் அதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணி வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு)(பொ)
சங்கரநாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஞானவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரசேகர் உட்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...