திருப்பூரில் இருந்து மதுரைக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக்கூறி பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை மற்றும் வெளியூர் செல்ல இரவு 8 மணியில் இருந்தே பேருந்துகள் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்த பயணிகள் அரசுப் போக்குவரத்து அலுவலர்களை அணுகியுள்ளனர். ஆனால் அவர்கள் முறையால் பதில்தரவில்லை எனக்கூறி பயணிகள் தாராபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சமரசப் பேச்சில் ஈடுபட்டதோடு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். எனினும் இரவு 12 மணிவரை பேருந்துக்காக பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், அரசுப்
பேருந்துகள் இயக்கப்படாதால் தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் அதிகம் கேட்பதாக வேதனை தெரிவித்தார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.