பழங்குடி இன சிறுவன் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த செயல் கொடூரமான செயல் என்றும், இந்த சம்பவம் பாஜகவின் மனிதாபிமானமற்ற பக்கத்தை காட்டுவதாக காங்கிரÞ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் பழங்குடி இன சிறுவன் மீது பாஜக பிரமுகர் பிரவேஸ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு அகில இந்திய காங்கிரஸ் ஆதிவாசி பிரிவு தலைவர் சிவாஜிராவ் மோஹே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிரவேஸ் சுக்லா என்ற பாஜக பிரமுகர் சிறுவன் மீது சிறுநீர் கழித்த சம்பவம் கொடூரமான செயலாகும் என்றும் இது பாஜகவின் மனிதாபிமானமற்ற பக்கத்தை காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், நாடு முழுவதும் பழங்குடி இன மக்களை தவறாக நடத்துவதையும் இந்த சம்பவத்தையும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த அவர், பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் கொடூரமான செயலை கண்டித்து வரும் நாளை, நாளை மறுதினம் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று கூறினார்.