விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகளை செய்துவரும் பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக கிராமங்கள் தோறும் பனைவிதைகள் நடும் பணி துவங்கப்பட்டது.
காரியாபட்டி ஒன்றியத்தில், அனைத்து கிராமங்களிலும் 5 ஆயிரம் பனைமரங்கள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . காரியாபட்டி கல்குறிச்சி குண்டாற்று தடுப்பணை பகுதியில் பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர்கள் கல்குறிச்சி கணேசன் , வக்கணாங்குண்டு தேவி லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், தடுப்பணை அமைந்துள்ள ஆற்றின் இரண்டு கரைப் பகுதிகளில் முதற்கட்டமாக 200 க்கு மேற்பட்ட பனைவிதைகள் நட்டுவைக்கப் பட்டது. ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன் பனைவிதை நடும்பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், கல்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பசுமை அறக்கட்டளை நிறுவனர் பொன்ராம் கூறிய போது: தமிழகத்தில் அடையாளமாக இருந்த பனைமரங்கள் இன்று காணாமல் போய்கொண்டிருக்கிறது. நிலத்தடி நீரை சேமித்து வறட்சியிலும் நன்றாக வளரும் பனைமரங்கள். மூலம் பல்வேறு பலன்கள் கிடைத்தது. மண் அரிப்பை ஏற்படாமல் கண்மாய் கரைகளை பாதுகாக்க கூடிய மரம் . நமக்கு பயன்தரும் பனைமரங்களை மீண்டும் பயிர்செய் வதற்காக அனைத்து கிராமங்களிலும் ஆற்றுகரைப் பகுதி, குளம், கண்மாய் கரை பகுதியில் பனை விதைகள் நடுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம் தமிழக அரசின் ஊராட்சி , வேளாண்மை , தோட்டக்கலைத் துறை வனத்துறை மற்றும் வருவாய் துறையினரின் உறுதுணை யோடு பள்ளி கல்லூரி மாணவர்களின் ஒத்துழைப்போடு காரியாபட்டி ஒன்றியத்தில் 5 ஆயிரம் பனைவிதைகள் நடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…