சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் ஐப்பசி மாத வளர்பிறை சனி மகா பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வரன் லிங்கம் நந்திகேஸ்வரர் சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் திருக்கோவிலை வலம்வந்து சிவாய நமக சிவாய நமக என்று சொல்லி வந்தனர்.சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது பிஜேபி விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர், எம் வி எம் குழும தலைவர் மணிமுத்தையா,நிர்வாகி வள்ளிமயில், எம் வி எம் தாளாளர், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோதைய ஈஸ்வரர் ஆலயத்திலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சனி பிரதோஷ விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…