Uncategorized
ரூ.500க்காக கத்தி முனையில் வழிப்பறி !
மதுரையில் செப்டம்பர் 11 அன்று ஆனையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தமிழ் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜ்குமார் 23. இவர் கூடல் புதூர் பிஎஸ்என்எல் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை கூடல் நகர் முகாமைச் சேர்ந்த ராஜதுரை மகன் குகன் என்ற கீர்த்தீஸ்வரன் 34 என்பவர் கத்தி முனையில் மிரட்டி ராஜகுமாரிடமிருந்து ரூ 500-ஐ வழிப்பறி செய்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து ராஜ்குமார் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறிசெய்த குகன் என்ற கீர்த்தீஸ்வரனை கைது செய்தனர்.