தன்னுடைய குடும்பத்தாருடன் தீபாவளி கொண்டாட முடியாத அளவுக்கு பணியில் சுமைகள் இருந்தாலும், அவற்றை பொருட்படுத்தாது முதியோர் இல்லத்தில் தீபாவளியை கொண்டாடி தன்னால் முடிந்த உதவிகளை ஆதரவற்ற முதியோர்களுக்கு வழங்கியுள்ளார் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர்.
திண்டுக்கல் மாவட்டம் , அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில், ஏராளமான முதியோர்கள் உள்ளனர். தீபாவளி அன்று, கருணை இல்லத்தில் இருக்கும் முதியோர்களை, அம்மைய நாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி சென்று பார்த்து அன்பாகவும் ஆதரவாகவும் பேசினார். மேலும், அங்கிருந்த அனைவருக்கும் உணவு அளித்து அவர்கள் அனைவருடனும் தீபாவளி வாழ்த்து பகிர்ந்து கொண்டார். சொந்த பந்தங்களை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் முதியோர்களுடன் தீபாவளி கொண்டாடிய ஆய்வாளர் சண்முக லட்சுமியை அனைவரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…