கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்து, தீட்சிதர்கள் வைத்த பதாகையை காவல்துறை உதவியுடன், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் அகற்றினர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என எழுதிய அறிவிப்பு பலகையை, ஆலய தீட்சிதர்கள் வைத்துள்ளனர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இதனை தொடர்ந்து, நடராஜர் கோவிலுக்கு, சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கனகசபை மேல் பக்தர்கள் ஏறக்கூடாது என்று இருந்த பதாகையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை உதவியுடன், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள், தீட்சிதர்கள் வைத்த பதாகையை அகற்றினர்.