முதலமைச்சருக்கு கேள்வி- ஆர்.பி.உதயகுமார்

 மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது;

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று கூறிய பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழை எடுத்து கூறும் வகையில், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதும் 234  தொகுதிகளில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

- Advertisement - WhatsApp

தமிழகத்தில் 1.55 லட்சம் கி.மீ கிராமப்புற மற்றும் ஊரக வளர்ச்சி சாலைகள் உள்ளது, கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மட்டும் 21,085 கோடி மதிப்பில், 92,887 கிலோமீட்டர் ஊரக சாலைகளை அமைக்கப்பட்டன, தற்போது சாலையில் எல்லாம் மிகவும் பழுதடைந்து உள்ளது.

மதுரை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 9 பேரூராட்சி, 420 கிராம பஞ்சாயத்து, 655 வருவாய் கிராமங்கள் உள்ளது ஏறத்தாழ 3710 கிலோமீட்டர் சதுர அடி கொண்ட மதுரையில் 30 லட்சம் பேர் வசிக்கின்றனர் மதுரை மாநகராட்சி மட்டும் 1253 சதுர கிலோமீட்டர் அளவில் குடியிருப்புச் சாலைகள் உள்ளது.

தற்பொழுது நெடுஞ்சாலை துறையில் நடப்பு ஆண்டில் 18,218 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் சாலை பணிகளுக்காக எவ்வளவு நிதி என்று கூறவில்லை, அதேபோல் ஊரக கிராமப்புற சாலைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை தெரியவில்லை,

- Advertisement - WhatsApp

புரட்சித் தலைவர் சத்துணவு திட்டத்தை தொடங்கி மகத்தான சாதனை படைத்தார் ,அம்மா ஆட்சிகாலத்திலும்,எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் சிறப்பாக செய்யப்பட்டது, தற்போது முதலமைச்சர் காலை சிற்றுண்டியை தொடங்கியுள்ளார் இதன் பயன் செயல் வடிவில் தான் தெரியும்,

முப்பெரும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் முல்லைப் பெரியாறு, 58 கால்வாய் குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் அறிவிப்பு வெளியிடுவாரா என்று விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர், ஜாக்டோ ஜியோ மாநாட்டில் அரசு பட்டை நாமும் சாத்தியது போல் முப்பெரும் விழாவில் திட்டங்கள் அறிவிப்பாரா இல்லை மக்களுக்கு மட்டும் பட்டைநாமம் சாத்துவாரா என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

சிஏஜி விவகாரம்… அரசு மீது சந்தேகம்: டெல்லி அரசை கண்டித்த ஐகோர்ட்

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிஏஜியின் அறிக்கைக்கு தாமதமாக பதில் தந்ததற்காக ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லி ஐகோர்ட் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது.வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லி...