சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கும் திட்டத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில், புதுமை பெண் திட்டத்தின் மூலமாக பயன்பெறும், 637 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையுடன், வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் மற்றும் நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய “புதுமைப் பெண்” பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டை (Debit Card)களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை தங்கம்தென்னரசு ஆகியோர் வழங்கினர்.

