மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் படி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல் மற்றும் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பது தொடர்பான பயிற்சிவழங்குதல் மற்றும் பள்ளிகளில் சேகரமாகும் கழிவுகளை பள்ளியிலேயே எவ்வாறு உரமாக்குதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது .
அதன் தொடர்ச்சியாக, காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து தூய்மை உறுதிமொழி எடுத்தனர். சோழவந்தான் பேரூராட்சியினை கழிவுகள் இல்லாத பேரூராட்சியாக மாற்றிட பள்ளி மாணவ மாணவியர்களின் கூட்டு முயற்சியுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதில், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன், பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின், கவுன்சிலர்கள் சத்திய பிரகாஷ் ,கொத்தாலம் செந்தில் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பள்ளி தாளாளர் முதல்வர் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகள், மற்றும் பெற்றோர்கள் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
