ஜனநாயக அமைப்புகள் மீது ஒன்றிய அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ள பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அமைப்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, NCHRO உள்ளிட்ட அமைப்புகள் மீதான தடையை நீக்க வேண்டும், ஊபா சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், என்.ஐ.ஏ. வை கலைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 8ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர்கோட்டத்தில் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆப்பாட்டத்திற்கு அரங்க குணசேகரன் தலைமை ஏற்க உள்ளதாகவும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.