மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றங்கரையில் பேரிடர்கால மீட்பு ஒத்திகை நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றங்கரையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை ஒட்டி பேரிடர் மேலாண்மை ஒத்திகை பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது. மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரேமா தலைமை வகித்து உரையாற்றினார். மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார் முன்னிலை வைத்தார். வாடிப்பட்டி தாசில்தார் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார். சோழவந்தான் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் ஆற்றில் தவறுதலாக இறங்கி விழும் நபரை மீட்பது பற்றிய டெமோ செய்து காண்பித்தனர். மேலும்.முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து சுகாதாரத் துறையினர் விளக்கம் அளித்தனர். இதில் வருவாய் அலுவலர்கள் சோழவந்தான் சுப்புலட்சுமி, தென்கரை சதீஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் திருவேடகம் ஜெயபிரகாஷ், மேலக்கால் மாசாணம், மற்றும் தென்கரை உள்கோட்டம், சோழவந்தான் உள்கோட்ட வருவாய் அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகேஸ்வரி வீரபத்திரன் பழனி ஊராட்சி செயலாளர்கள் விக்னேஷ் சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் தலைமையில் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி, உக்கிரபாண்டி சிக்கந்தர் பாண்டி உள்ளிட்ட காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்