இ சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் பேட்டி அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், இ.சேவை மையங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர் இ.ஆபிஸ் திட்டம் வழியாக அரசு அலுவலகங்களில் வேலைகள் வேகமடைந்திருப்பதாகவும், கடந்த 4 மாதத்தில் மட்டும் மாவட்டங்களில் ஒரு லட்சம் கோப்புக்கள் பார்க்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், காகிதம் இல்லா அலுவலகம் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், அதிமுக ஆட்சிக் காலத்தில் ஐ.டி துறை செயலற்று இருந்ததாகவும் குற்றம்சாட்டினார். இது குறித்து விவாதம் நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜ், ஐ.டியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், ஐ.டி எக்ஸ்போர்ட் மூலம் மதுரைக்கு கடந்த ஆண்டு மட்டும் 1120 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. என்றும் தெரிவித்தார். தமிழகம் ஐ.டிதுறையில் 30% வளர்ச்சியை எட்டியுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் இ.ஆபிஸ் திட்டம் இந்தியத் துணை கண்டத்தில் தமிழகத்தில்தான் செயல்படுத்தி உள்ளோம் என்று குறிப்பிட்டு பேசினார்.