மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த அம்மன் சிலையை மீட்ட தொல்லியல் துறையினர் அது குறித்து ஆய்வு செய்துவருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த பசுமலை சாலையில் மழைநீர் செல்ல தோண்டப்பட்ட கால்வாய் அருகே இரண்டரை அடி உயரம் உள்ள கற்சிலை ஒன்று அம்மன் சிலை இருப்பதாக பொதுமக்கள் அரசுக்கு தகவல் அறித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தொல்லியல் துறையினர் பழமை வாய்ந்த அம்மன் சிலையை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். சேதமடைந்த சிலை எப்படி சாலையோரம் வந்தது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.