ALL NEW(S)

வசந்த் அன் கோ வாடிக்கையாளர்களுக்கு பரிசு

by udhayatoday  •  July 17, 2023

தீபாவளி சிறப்பு விற்பனையின் போது வசந்த் அன் கோ-வில் பொருட்கள் வாங்கி வாக்கிய போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வசந்த் அன் கோ நிர்வாக இயக்குனர்கள் தமிழ்செல்வி வசந்த குமார் மற்றும் விஜய் வசந்த் ஆகியோர் தங்க நாணயம் பரிசாக வழங்கினர்.

தீபாவளி பண்டிகையின் போது வசந்த் அன் கோ  கிளைகளில் பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்கள் வாக்கியப் போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள வசந்த் அன் கோ   கிளையில் பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர் சாந்தி என்பவர் வாக்கிய போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தங்க நாணயத்தை வசந்த் அன் கோ   நிர்வாக இயக்குனர் விஜய் வசந்த் பரிசாக வழங்கினார்.

- Advertisement -Advertisement

இந்த நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் வசந்த் அன் கோ கிளை மேலாளர் சந்திரமோகன், மற்றும் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரத்தின குமார், மேல்புரம் வட்டார தலைவர் ரவிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதே போல் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள வசந்த் அன் கோ  கிளையில் தீபாவளி சிறப்பு விற்பனையின் போது பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர் வினோத் என்பவர் வாக்கிய போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டு அவருக்கான தங்க நாணயத்தை வசந்த் அன் கோ நிர்வாக இயக்குனர் தமிழ் செல்வி வசந்தகுமார் வழங்கினார். பின்னர் வசந்த் அன் கோ  நிறுவனத்தின் 46 வது ஆண்டு கொண்டடும் வகையில் கேக் வெட்டி வசந்த் அன் கோ ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் சோழிங்க நல்லூர் வசந்த் அன் கோ  கிளை மேலாளர் ரவிந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

DISCLAIMER: Some news articles and content published on this website are translated, rewritten, or generated with the assistance of Artificial Intelligence (AI) tools. While every effort is made to ensure accuracy and quality, occasional grammatical errors, typographical mistakes, translation inaccuracies, or other unintended issues may occur. Such errors are purely unintentional, and the website administration shall not be held responsible for them. Readers are kindly requested to disregard any such mistakes if noticed. We sincerely thank our readers for their continued support and encourage everyone to share our news and updates with others.