மதுரை வைகை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கோரிப்பாளையம், கீழ்பாலம், மீனாட்சி கல்லூரி பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அத்துடன் வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில், பலத்த மழையால் வைகை அணையில் நீர் நிரம்பி வருகிறது.
இதனால் வைகை அணையில் அவ்வப்போது, தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பலத்த மழையால் அணையில், நீர் பெருக்கெடுத்து மதுரை கோரிப்பாளையம், கீழ் பாரமானது நீரில் மூழ்கி, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் வைகை ஆற்றில் குளிக்கவோ, ஆடு மாடுகளை குளிக்க வைக்கவும் கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஷ்
சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், மதுரை கோரிப்பாளையம் பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.