மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மேற்கே உள்ள சாத்தையாறு அணையாகும். இதன் கொள்ளளவு 29 அடி, நேற்று வரை 26 அடி தண்ணீர் இருந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் இரவு திடீரென பெய்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து அணை நிரம்பியது. இந்த அணைக்கு மூன்று மதகுகள் உள்ளன. இதில், ஒன்று பழுதாகி தண்ணீர் 100 கனஅடி நீர் வெளியேறி கொண்டு வருகிறது. இந்த உபரிநீர் வெளியேற்றத்தால் விவசாயிகளுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் எனவே, பழுதாகியுள்ள மதகின் சட்டத்தை உடனே சரி செய்து, நடவடிக்கை எடுக்க அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
