கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 103 வயதுடைய பாட்டிக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், 3 மாநிலங்களில் இருந்து வந்த 200க்கும் மேற்பேட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள முத்துராயன் குடியிருப்பு பகுதியில் வெங்கடலட்சும்மா மூதாட்டி வசித்து வருகிறார். 103 வயதான இவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இவருக்கு 6 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இருந்து 5 தலைமுறைகளாக உள்ள 217 பேர் கொண்ட குடும்பத்தினர், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், பாட்டிக்கு ஊட்டி விட்டு, உறவினர்கள் மற்றும் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வந்திருந்து பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றனர்.