அரசு மக்களுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள், நிறைவேற்றப்பட வேண்டிய, நிறைவேற்றாத கோரிக்கைகள் பல்வேறு பிச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் குரல் எழுப்புவோம் என சென்னை செல்வதற்கு முன் மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் பேட்டி அளித்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் குறித்த ஈபிஎஸ் கடிதம் குறித்த கேள்விக்கு, சட்டப்பேரவையை பொறுத்தவரை பேரவைத்தலைவர் முடிவு தான் இறுதியானது.
அதற்கு கட்டுப்படுவோம் என்று குறிப்பிட்ட அவர், சட்டப்பேரவையில், எடப்பாடி ஒபிஎஸ் அருகருகே அமர போவது குறித்த கேள்விக்கு, எதிர்எதிர் என நீங்கள் கூறுகிறீர்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்சியை எந்த நோக்கத்திற்காக வளர்த்தார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எங்கள் செயல்பாடு நடவடிக்கை இருக்கும் என பேட்டியளித்தார். மேலும், தொண்டர்களின் அடிப்படை உரிமையை காக்கவே, எம்ஜிஆர் சட்ட விதிகளை உருவாக்கி அதை பாதுகாத்தார். அதை தொண்டர்களிடம் இருந்து பறிபோகாமல் காப்பதே எங்கள் நோக்கம் ஆகும் என பேசினார்.
