சென்னை அடுத்த பீர்க்கன்காரணையில் கோவில் மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையன் திருட முயற்சி செய்தபோது, பொது மக்கள் சத்தம் தப்பி ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை தேவனேசன் நகரில் ஸ்ரீ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இரவு நேரத்தில் வழக்கம் போல் கோவிலை பூட்டப்பட்ட நிலையில் மர்ம நபர் ஒருவர் கோவில் உண்டியலை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட பொது மக்கள் கூச்சலிட்டதும் மர்ம நபர் அங்கிருந்து ஓட்டம்பிடித்தான்.
இது குறித்து தகவல் அறிந்த பீர்க்கங்கரணை போலீசார் விரைந்து சென்று மர்ம நபர் கொண்டு வந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து அங்கிருந்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதற்கிடையில் அதே நபர் அப்பகுதியில் உள்ள மற்றொரு ஸ்ரீ செல்வ சக்தி விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் பட்டுலிங்கம் என்பவரின் பூட்டப்பட்டிருந்த வீட்டின் பூட்டையும் கொள்ளையன் உடைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.