திருமலையில் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்தப் பூங்காவை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கும் வைகுண்டம் காம்பளக்ஸ் சுற்றபுறத்தின் வெளியே உள்ள பூங்காவில் நன்கொடையாளர்கள் மூலம் ₹ 70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், இந்த பூங்கா பிரம்மோற்சவ விழாவை காண வரும் பக்தர்களுக்காகவும், வரிசையில் சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் இருக்கும் போது பசுமையுடன் கூடிய ஆன்மீக சிந்தனையை கூட்டும் விதமாகவும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாராயணகிரி, ஜிஎன்சி பூங்காக்களும் புதுப்பிக்கப்பட்டு பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. முதல்வர் ஜெகன்மோகன் 27ஆம் தேதி பிரம்மோற்சவத்தின் கொடியேற்றத்தின் போது ஆந்திர மாநில அரசின் சார்பில் பட்டுவஸ்தர்களை சமர்ப்பிக்க உள்ளார். அதே சமயம் நன்கொடையாளர்கள் மூலம் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகளை எண்ணுவதற்காக கட்டப்பட்ட பரக்காமணி கட்டிடத்தையும், பத்மாவதி விருந்தினர் மாளிகை புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திறந்து வைக்க உள்ளார். என தெரிவித்தார். மேலும் பிளாஸ்டிக் கவர்கள் இல்லாத திருமலையாக கொண்டுவரப்பட்டதோடு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கும் முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும், திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் பயன்பாட்டிற்கு டீசல் மற்றும் பெட்ரோல் இல்லாமல் பேட்டரி பேருந்துகளை இயக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இதற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாநில அரசு 100 மின்சார பேருந்துகளை வாங்க நிதி ஒதுக்கி உள்ளதாகவும், முதற்கட்டமாக திருப்பதி திருமலை இடையே மட்டும் 50 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார். பக்தர்களின் வசதிக்காகவும் திருப்பதி பொதுமக்களுக்காக கட்டப்பட்ட வரும் சீனிவாச சேது மேம்பாலத்தின் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முழுவதுமாக முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் கரக்கம்பாடி சாலையில் அமைக்கப்பட்டுள்ள சீனிவாச செய்து பாலம் இன்னும் பத்து நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.
