திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கவேண்டும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார்.
அப்போது அவர் திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கவேண்டும் எனவும் தமிழ்நாட்டில் கோதுமை நுகர்வு அதிகரித்துள்ளதால் கூடுதலாக 15 ஆயிரம் மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர், மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் நுகர்வோர்துறை அமைச்சர் பியூஸ் கோயலை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டிற்கு கூடுதலாக உணவு பொருட்கள் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.