Tag: subramanya swamy koil

  • திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா

    திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா

    தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. ஏராளமான பெண்கள் கைகளில் காப்புகட்டி சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கின்றனர்.

    மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள விசாக கொரடு மண்டபத்தில் யாகசாலை பூஜை, காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. 25 ஆம் தேதி முதல் துவங்கி வரும் 31ஆம் தேதி வரை ஏழு நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறும். சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் வள்ளி, தேவ சேன சமேத சண்முகருக்கு முருகனின் பிரதிநிதியாக நம்பி பட்டருக்கு காப்பு கட்டி பின்னர் பக்தர்களுக்கு கம்பத்தடி மண்டபத்தில் காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 29ஆம் தேதி கோர்த்தான அம்பிகையிடம் இருந்து சூரபத்மனை அழிக்க ” சக்திவேல்” வழங்கும் விழா நடைபெறும். பின்னர், வரும் 30 தேதி மாலை சூரபத்மனை அழிக்க முருகன் சக்திவேலை கொண்டு சன்னதி தெருவில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் சூரபத்மனை அழிக்கும் “சூரசம்ஹார லீலை” நிகழ்ச்சி நடைபெறும். வரும், 31ஆம் தேதி கந்த சஷ்டி விழாவின் நிறைவினை ஒட்டி முருகன் சட்டத்தேரில் வீதி உலா பவனி வருவார். வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் கோவில் மண்டம் மற்றும் சஷ்டி மண்டபங்களில் தங்கி காப்பு கட்டி 7 நாட்கள் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வார்கள். கந்த சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் எலுமிச்சை சர்க்கரை பழச்சாறு,பால். வாழைப்பழம் மற்றும் திணைமாவு ஆகியவை உணவாக கொண்டு கடும் விரதம் மேற்கொள்வார்கள். சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பழமொழியாகவே உள்ளது. “சஷ்டியிரு(விரதமிரு)ந்தால் அகப்பையில் குழந்தை வளரும்” என்பதே சட்டியிலிருந்தால் அகப்பைக்கு வரும் என மாறியதாக கூறப்படுகிறது.

  • மலைமேல் குமரனுக்கு வேல் எடுக்கும் விழா

    மலைமேல் குமரனுக்கு வேல் எடுக்கும் விழா

    மதுரை:

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிராம மக்கள் கொண்டாடும் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
    திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை பகுதியில் நக்கீரர் தவம் இருக்கும் போது அவரது தவத்தை கலைக்க கட்முகி என்ற பூதம் கடத்திச் சென்றது. அவரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி மீட்டு சாப விமோசனம் நீங்க மலைமேல் தனது திருக்கரத்தில் உள்ள வேல் கொண்டு கீரி கங்கைக்கு நிகரான காசி தீர்த்தத்தை வரவழைத்ததாக ஐதீகம்.

    இதனை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டு தோறும் திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் மலை மேல் குமரருக்கு புரட்டாசி மாதம் வேல் எடுக்கும் விழாவாக கொண்டாடுவது வழக்கம். மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழாவினை முன்னிட்டு மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் வைத்திருக்கும் வேலை பல்லக்கில் வைத்து திருவீதி உலா வந்து மலை மேல் உள்ள காசி தீர்த்தத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட து. தொடர்ந்து மலைமேல் உள்ள காசி தீர்த்தத்தில் வேலுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அங்குள்ள குமரருக்கு வேல் சாற்றப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

    கிராம மக்கள் தங்களது விவசாயம் செழிக்க வேண்டி சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அங்கு வந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் கதம்ப சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து மாலை பல்லாக்கில் வேல் கொண்டு வரப்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் சன்னதிக்கு வந்தடையும். அங்குள்ள பழனியாண்டவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வேல் பழனியாண்டவர்க்கு சாற்றப்படும். அங்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று பூ பல்லக்கில் புறப்பாடாகி திருப்பரங்குன்றம் மூலஸ்தானத்தின் உள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கரத்தில் இரவு வேல் சேர்க்கப்படும்.

    இவ்விழாவில் திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வேலுக்கு அபிஷேகம் இல்லை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடவரை கோவிலாகும் அதனால் இங்கு மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணியருக்கு அபிஷேகம் நடைபெறுவதில்லை அதற்கு பதிலாக சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் உள்ள தங்க வேலுக்கு பாலாபிஷேகம் செய்யப்படும்.