GOVT/POLITICS

எடப்பாடி பழனிசாமிக்கு கீதா ஜீவன் கண்டனம்

by udhayatoday  •  January 2, 2025

பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் கல்லூரி மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு அச்ச உண ர்வை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

- Advertisement -Advertisement

பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக பிரமுகர்களை காப்பாற்றவும்

அதிமுக இளைஞரணியின் பொள்ளாச்சி நகரச் செயலாளராக இருந்த அருளானந்தத்தை காப்பாற்றவும் பாதிக்கப்பட்ட பெண்களையே அதிமுகவினர் பகிரங்கமாக மிரட்டிய கொடூரம் நடந்ததை மக்கள் என்றும் மறக்கவே மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுக ஆட்சியில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை பெண்கள் வெளியே சொல்லவே பயப்பட்ட நிலை இருந்தது. அந்த நிலை மாறி தற்போது திராவிடமாடல் ஆட்சியில் பெண்கள் தைரியமாக வெளியே வந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமையை சொல்கிறார்கள் என்றால் அது முதலமைச்சர் மீது தமிழ்நாட்டு பெண்கள் வைத்துள்ள நம்பிக்கை தான் என்றும் அந்த நம்பிக்கையை தி

- Advertisement -Advertisement

ராவிட மாடல் அரசு என்றும் காக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் புகார் பெற்றவுடன் விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர் கீதா ஜீவன், தனக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், இந்த விவகாரத்தில் பழனிசாமி அரசியல் செய்து, அரசியல் அறத்தையும் மாண்பையும் குழி தோண்டி புதைத்துவிட்டார் என கண்டித்துள்ளார்.

மாணவி விவகாரத்தில் உயர் நீதிமன்றத்திலேயே தமிழ்நாடு அரசு உரிய பதில் அளித்துவிட்ட போதும் தனது சுய அரசியல் ஆதாயத்திற்காக இல்லாத ஒன்றை இருப்பது போல மேலும் வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கும் பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

- Advertisement -Advertisement

 

மேலும் கல்லூரி மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் தேவையின்றி அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் பழனிசாமி நடந்து கொண்டிருப்பது உண்மையிலேயே அருவருக்கத்தக்க செயல் என்றும் கீதா ஜீவன் குறிப்பிட்டுள்ளார்.

DISCLAIMER: Some news articles and content published on this website are translated, rewritten, or generated with the assistance of Artificial Intelligence (AI) tools. While every effort is made to ensure accuracy and quality, occasional grammatical errors, typographical mistakes, translation inaccuracies, or other unintended issues may occur. Such errors are purely unintentional, and the website administration shall not be held responsible for them. Readers are kindly requested to disregard any such mistakes if noticed. We sincerely thank our readers for their continued support and encourage everyone to share our news and updates with others.

- Advertisement -Advertisement