Uncategorized

பணமோசடி வழக்கு பாஜக பிரமுகருக்கு சிறை

by udhayatoday  •  July 6, 2023

திருவள்ளூர் நீதிமன்றம் பண மோசடி வழக்கில், மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு, 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளராக பதவி வகிப்பவர் கருணாகரன்.  இவர் நாராயணமூர்த்தி என்பவரிடம் கடந்த 2019ஆம் ஆண்டு, 7 லட்சம் ரூபாய் பணத்தை கடனான பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், நாராயணசாமி தான் கொடுத்த பணத்தை கருணாகரனிடம் கேட்டபோது, வங்கி காசோலை ஒன்றை கொடுத்திருக்கிறார்.  பிறகு அவர் காசோலையை வங்கியில் செலுத்தியபோது, கருணாகரன் வங்கி கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது.

- Advertisement -Advertise

இது குறித்து நாராயணசாமி, திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இதனை தொடர்ந்து நீதிபதி, மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு, 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன் கடனாக பெற்ற பணத்தை திருப்பி தருமாறு உத்தரவிட்டார்.