Uncategorized
மதுரையில் போதையில் அரிவாள் வெட்டு! 4 பேர் கைது:
மதுரை வலையன்குளம் பகுதியில் போதையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு நடைபெற்ற சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் மீது பெருங்குடி போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். வலையன்குளம் பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா போதையில் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதில் சகோதரர்கள் திருமண், அழகு ராஜா ஆகியோடிர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து பெருங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், டிஎஸ்பி வசந்தகுமார் உத்தரவின் பேரில் , பெருங்குடி போலீஸார் குற்றவாளிகளை 4 பேரை கைது செய்தனர் மேலும், தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் வினோத், முத்துகுமார், வைரமுத்து, சஞ்சை குமார் ஆகிய நால்வரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.